4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் மே 19 தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் காலமானதை அடுத்து காலியாக உள்ள பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 22ஆக
உயர்ந்தது. இதையடுத்து 4 தொகுதிகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலுடனேயே வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அண்மையில் சென்னை வந்த தேர்தல் ஆணையர்கள், விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறிய நிலையில், 4 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலின் 7வதுகட்ட வாக்குப்பதிவு நாளான மே 19-ம் தேதியன்று சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெறும் வேட்பு மனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்ரல் 29ம் தேதியாகும். ஏப்ரல் 30-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் மே 2-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளிலும் மே 19-ம் தேதியன்று பதிவாகும் வாக்குகள், மே 23-ம் தேதி எண்ணப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு - டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து
Next Story