சென்னை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் - அன்புமணி கேவியட் மனு தாக்கல்

சேலம்- சென்னை இடையிலான 8 வழிச்சாலை வழக்கில் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
x
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பால், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்பட ஐந்து மாவட்ட மக்கள், விவசாயிகள் மற்றும் வழக்கு தொடர்ந்த அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எட்டு வழிச்சாலை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. இந்நிலையில், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி சார்பில் அவரது வழக்கறிஞர் பாலு, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். எட்டு வழிச்சாலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்