ஒரு தொகுதிக்கு 5 வாக்கு இயந்திரங்களுடன் ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டையும் ஒப்பிட்டு, சரிபார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்புகை சீட்டு எண்னப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போதைய நடைமுறையில் நம்பிக்கையில்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், மக்களிடம் தேர்தல் அமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story