வருமான வரி சோதனை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, வருமான வரி சோதனை நடத்தினால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வருமான வரி  சோதனை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்
x
மத்திய வருவாய் துறை செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, வருமான வரித்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகள் பாரபட்சமின்றி நடுநிலையாகச் செயல்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.சோதனைக்கு முன்னர், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சில நாட்களுக்கு முன்பும், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நேற்றும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது.இந்நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.தேர்தல் நடவடிக்கைகளுக்காக கறுப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்