உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்

உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்
x
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக  இருந்து வருகிறது.இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும் என்றும் அதிகப்பட்ச வெப்பநிலையாக 35டிகிரி செல்சியஸாகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்