மதுரை கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாக்கான கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர்.
இந்நிலையில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மீனாட்சி சுந்தரேசசுவரர், பிரியாவிடை ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 15-ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், 17-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் வரும் 19ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் நடக்கிறது.
Next Story