கோயில் திருவிழா நடத்த அதிகாரிகள் முட்டுக்கட்டை? - தேர்தலை புறக்கணிக்க 8 சமுதாய மக்கள் முடிவு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கோயில் திருவிழாவை நடத்த அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக கூறி, தேர்தலை புறக்கணிக்கப்போவதாக எட்டு சமுதாய மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோயில் திருவிழா நடத்த அதிகாரிகள் முட்டுக்கட்டை? - தேர்தலை புறக்கணிக்க 8 சமுதாய மக்கள் முடிவு
x
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் கோயில் திருவிழாவை நடத்த அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக கூறி, தேர்தலை புறக்கணிக்கப்போவதாக எட்டு சமுதாய மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில்  திருவிழா நடத்த ஒரு சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த 8 சமுதாய மக்கள், திருவிழா நடத்த அனுமதி தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்