சுங்க கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு : சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லுர் சுங்கச்சாவடியில் உள்ளூர் 4 சக்கர வாகனங்களுக்கு மாதாந்திர நுழைவு கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசாரின் சமரச பேச்சுவாத்தை தொடர்ந்து, போராட்டம் தற்காலிமாக விலக்கி கொள்ளப்பட்டது.
Next Story