வேனில் 149 கிலோ தங்க கட்டி பறிமுதல் - தங்க வியாபாரிகள் எதிர்ப்பு
கோவையில் வாகன சோதனையின் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து நகை கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்
கோவையில் வாகன சோதனையின் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து தங்க நகை வியாபாரிகள் நகை கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வியாபாரிகளிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம் பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புளியகுளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி வேன் மூலம் கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது
Next Story