சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டம் எதிர்த்து வழக்கு : ஏப். 8 - ல் தீர்ப்பு
சென்னை - சேலம் இடையே 8 வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சேலம், , தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 8 வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்ககோரி 5 மாவட்ட விவசாயிகள், பாமாக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி , பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதனை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, கடந்த 8 மாதங்களாக விசாரித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story