தேர்தலுக்காக 150 துணை ராணுவ கம்பெனிகள் வருகை - சத்யபிரத சாகு தகவல்
தேர்தல் பாதுகாப்பிற்காக தமிழகத்திற்கு 150 துணை ராணுவ கம்பெனிகள் வருகைத்தர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் உரிய ஆவணமற்ற 45 கோடியே 57 லட்சம் பணம் கைப்பற்றவுள்ளதாகவும், 520 கிலோ தங்கம் மற்றும் 421 கிலோ வெள்ளி, பத்தாயிரத்து 198 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 19 ஆயிரத்து 655 துப்பாக்கிகள் உரிமத்துடன் பெறப்பட்டுள்ளதாக கூறிய அவர்,தேர்தல் பணியில் மூன்றரை லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.சிவிஜில் செயலி மூலம் பெறப்பட்ட1700 புகார்களில், 696 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 924 பேர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுவதாக அவர் கூறினார்.
Next Story