முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா : பெண் பக்தர்கள் வழிபாடு - அலகு குத்தி நேர்த்திகடன்

சேலம் மாவட்டம், காவேரிபட்டி கிராமத்தில் உள்ள ஓங்காளியம்மன் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா : பெண் பக்தர்கள் வழிபாடு - அலகு குத்தி நேர்த்திகடன்
x
சேலம் மாவட்டம், காவேரிபட்டி கிராமத்தில் உள்ள ஓங்காளியம்மன் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பெண்கள் பங்கேற்று அலகு குத்தி, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஒரு சிலர், விமான அலகில் தொங்கியபடி வந்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. 


பூக்குழி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் திருக்கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. கடந்த  24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் 12வது நாளில் அதிகாலை முதல் அக்னி  வளர்க்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் , எண்ணெய் ஆகியவைகள் பயன்படுத்தப்பட்டன. 12 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு மஞ்சள் துணி அணிந்து தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்