முதலமைச்சர் குல தெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி - பக்தர்கள் அதிர்ச்சி

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியின் குல தெய்வ கோவிலான அப்பத்தான் கோவிலில் இரண்டாவது முறையாக கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
முதலமைச்சர் குல தெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி - பக்தர்கள் அதிர்ச்சி
x
ஈரோடு மாவட்டம் பவானி அருகே நசியனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளது அப்பத்தான் கோவில். இன்று காலை பூசாரி கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின், நிலைக்கதவு உள்பட அனைத்து கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்துள்ளன. அதிர்ச்சியடைந்த பூசாரி, சித்தோடு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த‌போது, வட மாநில இளைஞர்கள் நுழைந்திருப்பது பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் பழனிசாமியின் குல தெய்வ கோவிலான இக்கோவிலில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின் தற்போது இரண்டாவது முறையாக கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்