போலி சான்றிதழ்கள் மூலம் பணிநியமனம் - 442 பேருக்கு குற்ற பத்திரிக்கை நகல் வழங்கியது சி.பி.ஐ. நீதிமன்றம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி சான்றிதழ்கள் மூலம் துப்பரவு, தபால் பணியாளர்களை நியமித்து அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி சான்றிதழ்கள் மூலம் துப்பரவு மற்றும் தபால் பணியாளர்களை நியமித்து அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன. அதிக கல்வி தகுதி கொண்ட பலர், போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வங்கியின் முன்னாள் தலைவர் உள்பட 442 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் அனைவரும் நேற்று ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. விசாரணை வரும் ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Next Story