"சந்தர்ப்பவாத கூட்டணி, திமுக" - முதல்வர் பழனிசாமி
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நாகர்கோவிலில் உள்ள திங்கள் சந்தை பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நாகர்கோவிலில் உள்ள திங்கள் சந்தை பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் தமிழகத்தில் தி.மு.க- வே இருக்க கூடாது என்றும் கவுன்சிலராக கூட இருக்க தகுதி இல்லாதவர் ஸ்டாலின் என்றும் வைகோ பேசியதை சுட்டிக்காட்டினார். தற்போது, அதே திமுக உடன் கூட்டணி வைத்ததோடு, ஸ்டாலினை முதல்வராக்க போவதாகவும் வைகோ கூறி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார். இதுவே, திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்பதற்கு உதாரணம் எனவும் தெரிவித்தார். திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர், திமுகவை சார்ந்தவரா? மதிமுகவை சேர்ந்தவரா? எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
Next Story