"100 நாட்கள் வேலைத்திட்டம் 365 நாட்களாக உயர்த்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
100 நாட்கள் வேலைத்திட்டம் 365 நாட்களாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
100 நாட்கள் வேலைத்திட்டம் 365 நாட்களாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து, 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டச் சொன்னபோது, வேனிலிருந்து ஜெயலலிதா என பெயர் சூட்டினார். பின்னர் குழந்தை ஆண் குழந்தை என்று தெரிவித்ததை அடுத்து, கீழே இறங்கி வந்த அமைச்சர் குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயர் சூட்டினார்.
Next Story