ஆளுநர் மீது இந்திய கம்யூ. புகார்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் இந்திய கம்யூ. புகார் அளித்துள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் இந்திய கம்யூ. புகார் அளித்துள்ளது. ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அதிமுக மற்றும் பாஜகவின் சாதனைகளை குறிப்பிடுவதாக புகார் அளித்துள்ளனர். "பிரசாரக் கூட்டங்களில் தேர்தல் முடிந்தவுடன் ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் பேசுவது நடத்தை விதிகளுக்கு எதிரானது" எனவும் குறிப்பிட்டுள்ளனர். வருமான வரித்துறையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஆளும் கட்சி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story