தமிழகம் முழுவதும் 20 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு
தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணங்களை உயர்த்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 43 சுங்கச் சாவடிகள் உள்ளன.இதில், 20 சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் வழியிலும்,சேலம் மற்றும் மதுரை நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளிலும் கட்டண உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே, சுங்க கட்டணம் பெரும் சுமையாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வரும் நிலையில், கட்டண உயர்வு அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
Next Story