தேமுதிக பிரமுகர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
தேமுதிக பிரமுகர் பாண்டியனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை பாடியில், தேமுதிக பிரமுகர் பாண்டியனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாண்டியன் தேமுதிகவில் பொறியியல் பிரிவில் மாநில இணை செயலாளராக உள்ளார்.இவர் காலை தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு வரும் போது, அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது.சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பாண்டியன் உடலை, கொரட்டூர் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதை அடுத்து, போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story