1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 5.43 கோடி பாட புத்தகங்கள் - ஜூனில் பள்ளிகள் திறந்தவுடன் வழங்கப்படும்

பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் 5 கோடியே 43 லட்சம் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 5.43 கோடி பாட புத்தகங்கள் - ஜூனில் பள்ளிகள் திறந்தவுடன் வழங்கப்படும்
x
தமிழகத்தில் பழைய பாடத்திட்ட முறை மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்ட முறை  கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கடந்த கல்வி ஆண்டில் 1, 6, 9,11ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எஞ்சியுள்ள 7, 8,10,12 உள்ளிட்ட 8  வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன்படி, ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை 390 தலைப்புகளில் 5 கோடியே 43 லட்சம் புத்தகங்கள் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்