உயர்நீதிமன்ற வழக்கறிஞராக AOR தேர்ச்சி கட்டாயம் - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
AOR எனப்படும் ADVOCATE ON RECORD தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிய அனுமதிக்க உத்தரவிடக் கோரி, கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்களின் தரத்தை மேம்படுத்த இது அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் இளம் வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்றங்களில் பயிற்சி எடுத்தால்தான் வழக்குகள் குறித்து அறிந்து தகுதிகளை உயர்த்திக்கொள்ள இயலும். ஆகவே, குறைந்தது ஓராண்டாவது கீழமை நீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் இந்திய பார் கவுன்சில் செயலர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story