காவல்நிலையங்களில் தேங்கும் வழக்குகள் - முற்றுப்புள்ளி வைக்க புதிய முறை அறிமுகம்
குற்ற வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்தி சீர்த்திருத்தத்தை கொண்டுவர உள்ளது தமிழக காவல்துறை.
* குற்ற வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்தி சீர்த்திருத்தத்தை கொண்டுவர உள்ளது தமிழக காவல்துறை.
* தமிழக காவலர்களின் வழக்கமான பாதுகாப்பு பணிகளால், குற்றவாளிகளை பிடிப்பது, வழக்குப்போடுவது, கைது செய்வது, நீதிமன்ற நடைமுறை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் தேக்கம் அடையும் நிலை உள்ளது.
* இந்தநிலை மாற தமிழக காவல்துறை புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
* குற்றவழக்குகளை விசாரிப்பதற்கென தனி புலனாய்வு பிரிவு ஏற்படுத்துவதாக, தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
* இதற்கான உத்தரவை காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்.பிகளுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
* உச்ச நீதிமன்ற வழிகாட்டு உத்தரவின் படி தமிழக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளையும், இந்த புதிய அமைப்பு விசாரிக்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதற்கு ஒவ்வொரு காவல்நிலையத்திலும் எவ்வளவு காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்குக்கு ஆய்வாளர் உட்பட 90 பேர் இருப்பார்கள், குற்றப்பிரிவுக்கு ஆய்வாளர் உட்பட 30 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நகரங்களில் ஒரு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்குக்கு 76 போலீஸாரும், குற்றப்பிரிவுக்கு 24 போலீஸாரும் பணியில் இருப்பார்கள்.
* மிகப்பெரிய காவல்நிலையங்களில் மட்டும் சட்டம் ஒழுங்கு போலீஸார் 54 பேரும், குற்றப்பிரிவு 26 பேரும் இருப்பார்கள் என டி.எஸ்.பி. டி.கே.ராஜேந்திரன் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
* இதுபோன்ற புலனாய்வு பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட உள்ளது.
* இந்த புதியமுறை நடைமுறைக்கு வந்தால் போலீஸாருக்கு பெரும் நெருக்கடியிலிருந்து விலக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story