தேர்தல் பறக்கும் படை அதிரடி : ஆத்தூரில் 3 கிலோ தங்கம் பறிமுதல்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனில் இருந்த பெட்டிகளில் 3 கிலோ தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. ஆவணங்களை பரிசோதித்ததில் சந்தேகம் அடைந்த தனிப்படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை ஆத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல் காசிமிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நகைகள், வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட நகைகளின் மதிப்பு 1 கோடியே 24 லட்சம் ஆகும்.
Next Story