நீரவ் மோடியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓவியங்கள் ஏலம் : ரூ.50 கோடி வரை விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் சேகரிப்பில் இருந்த உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் ஏலம் விடப்படுகின்றன.
நீரவ் மோடியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓவியங்கள் ஏலம் : ரூ.50 கோடி வரை விற்பனையாகும் என எதிர்பார்ப்பு
x
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பிச் சென்ற  வைர வியாபாரி நீரவ் மோடியின் சேகரிப்பில் இருந்த உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் ஏலம் விடப்படுகின்றன.  நீரவ் மோடி வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றிய இந்த ஓவியங்களை, விற்பனை செய்ய அமலாக்கத் துறைக்கு  கடந்த வாரத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  ராஜா ரவி வர்மா உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த அந்த ஓவியங்கள், பிரபல ஏல நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில்,  சுமார்   30 கோடி ரூபாய் முதல் 50 கோடி வரை விற்பனையாகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்