சுங்க சாவடியில் பரபரப்பு - வேல்முருகன் போராட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சுங்கச் சாவடி ஊழியர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் மதுராந்தகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுங்க சாவடியில் பரபரப்பு - வேல்முருகன் போராட்டம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது காரில் சென்றுள்ளார். இந்தியா முழுவதும் சுங்கசாவடிகளில் இலவசமாக செல்வதற்கான உரிமத்தை வேல்முருகன், சுங்க சாவடி ஊழியர்களிடம் காண்பித்தும், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாத‌த்தில், வேல்முருகனின் கார் ஓட்டுனர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கினார். இருவருக்கும் இடையே கைகலப்பு உருவானதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த வேல்முருகன், காரில் இருந்து இறங்கி வந்து ஊழியரை தாக்க முற்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்