ஓடும் பேருந்தில் அரங்கேறிய துணிகர கடத்தல் : ரூ.98 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீசாக நடித்து ஓடும் பேருந்தில் இருந்து இளைஞரை கடத்திச்சென்று 98 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓடும் பேருந்தில் அரங்கேறிய துணிகர கடத்தல் : ரூ.98 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
x
சென்னை ஏழுகிணறு பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் கோபிநாத். கடந்த 11 ஆம் தேதி, சென்னை மாநகர பேருந்து ஒன்றில் பயணித்த இவரை, போலீசார் என கூறி அறிமுகமான மர்ம நபர்கள், தங்களது காரில் கடத்தி சென்றனர். கஞ்சா கடத்தியுள்ளதாக கூறி கையில் விலங்கு போட்டு அழைத்து சென்றதால் பொதுமக்களும் காவல்துறை என நம்பியுள்ளனர். இந்நிலையில் கடத்தப்பட்ட நபரிடம் இருந்து 98 லட்சம் ரூபாயை பறித்த ம‌ர்ம நபர்கள், வண்டலூர் அருகே அவரை இறக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து கடந்த 14 நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடத்தல் தொடர்பாக தற்போது 5 பேரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்