தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்
தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து மார்ச் 25 ம் தேதி பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 14ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், கட்சி பதிவு செய்யப்படாததால், தினகரன் கேட்ட குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story