மார்ச் 25-க்கு பின் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
வருகிற 25 ம் தேதிக்கு மேல் கோடை வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உலக வானிலை தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
"தந்தி டிவி" க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, வருகிற 25 ம் தேதிக்கு மேல் கோடை வெப்பம் உயரும் என்ற தகவலை அவர் வெளியிட்டார். தமிழகத்தை பொருத்தவரை, இயல்பை விட இந்தாண்டு வெப்பம் அதிகமாக உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
உலக வானிலை தினம் கொண்டாட்டம்...
''சூரியன், பூமி, வானிலை'' என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மைய இயக்குனர் பாலசந்திரன் பங்கேற்றார். பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெப்ப நிலை, மழை காட்சிகள், சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சீர்குலைந்த கஜா புயல் பாதிப்பு போன்றவை புகைப்பட காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. அதோடு, காற்றின் வேகத்தை அளக்கும் கருவிகள், வெப்பத்தை அளவிடும் கருவிகள் என பல சாதனங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. விழாவில் பேசிய மாணவ மாணவிகள், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாராட்டினர்.
Next Story