தேர்தல் ஆணைய நடவடிக்கை கடுமையாக உள்ளது - ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மிக கடுமையாக உள்ளதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்
தேர்தல் ஆணைய நடவடிக்கை கடுமையாக உள்ளது - ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு
x
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மிக கடுமையாக உள்ளதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஆசைமணி அறிமுக கூட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்றது.இதில் பங்கேற்று பேசிய அவர், பணம் பறிமுதல் செய்வதில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடுமை காட்டுவதாக கூறினார்.வங்கி ஏடிஎம்களுக்கு எடுத்து செல்லப்படும் பணம், வியாபாரிகள் கொண்டு செல்லும் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்படுவதாக அவர் கூறினார்.வேட்பாளர் செல்லும் போது திருஷ்டி சுத்தினால், பூசணிக்காய்க்கு 150 ரூபாய் வீதம் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்