100 % வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி - பைக்கில் வலம் வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி
இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பைக்கில் வலம் வந்தார்
நுாறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் பைக்கில் வலம் வந்தார்.சென்னைதிருவான்மியூரில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்,சென்னையில் உள்ள தொகுதிகளில் சுமார் 60 சதவீதம் வரை மட்டுமே வாக்குகள் பதிவு ஆவதாகவும், புதிய வாக்காளர்களை கவரும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுவதாகவும் கூறினார்.
Next Story