விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
'தேர்தல் நடத்தை விதிகளை மீறி செவிலியர் பணியிட மாற்றம்'
தேர்தல் நடத்தை விதிகள் உள்ள நிலையில், தமிழக சுகாதாரத் துறையில் செவிலியர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு பின்னர், செவிலியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளதால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, சுகாதாரத் துறை செயலாளருக்கு எதிராக, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினர்.
Next Story