மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகைகளை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ம் தேதி நடைப்பெற உள்ளது. இந்நாளில் மதுரையில் சித்திரை திருவிழா நடைப்பெற இருப்பதால் மதுரை தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க பல்வேறு தரப்பினரும், வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது  மதுரை சித்திரை திருவிழாவுக்காக, வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்திருப்பதாகவும், கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள தேவலாயங்களுக்கு  பிராத்தனைக்கு சுதந்திரமாக சென்று வர அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், எந்த காரணத்திற்காகவும்  வாக்குச்சாவடிகளை மாற்ற இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை ஏற்று தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்குகளை, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்