7 டன் கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 7 டன் கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்த லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கலப்பட தேயிலைத்தூள் இருந்ததை கண்டுபிடித்த அவர்கள், தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.லாரியில் வந்த சந்தோஷ் மற்றும் முருகேஷ் ஆகிய இருவரிடம் தேயிலை வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story