பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு : முருகன் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன
பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு : முருகன் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
x
முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில், அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முருகன் சிறப்பு அலங்காரத்துடன், மயில் வாகன வீதியுலா நடைபெற்றது. 

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

ஈரோடு, சென்னிமலை முருகன் கோயிலில் கடந்த 19ம் தேதி பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்,பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக  நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "அரோகரா"  கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவை முன்னிட்டு, முன்னதாக வள்ளி, தெய்வானை மற்றும் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 

பங்குனி உத்திர தீர்த்தவாரி வைபவம் 

கும்பகோணத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. கும்பகோணத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா  ஆண்டுதோறும் உற்சாகமாக  கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான  நாகேஸ்வரர் கோவில், ஆதி கம்பட்ட விஸ்வநாதர் கோயில்  சுவாமிகள் அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் மகாமக குளத்தில் எழுந்தருளினர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்

ரெங்கமன்னார், ஆண்டாள் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் களைகட்டியது. கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு திருப்பதியில் இருந்து கொண்டுவரப்பட்ட, பட்டு உள்ளிட்ட பொருட்களால் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்டார். கோவிந்தா, முழக்கத்துடன் மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று ஆண்டாள், பெருமாளை வணங்கினர். 






Next Story

மேலும் செய்திகள்