அண்ணா பல்கலை வேண்டாம் : "புதிய தொழில்நுட்ப பல்கலை உருவாக்குக" - தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்க, அரசுக்கு கோரிக்கை வைக்க தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலை வேண்டாம் : புதிய தொழில்நுட்ப பல்கலை உருவாக்குக - தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு முடிவு
x
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்க, அரசுக்கு கோரிக்கை வைக்க தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழங்களை தவிர்த்து தமிழகத்தில் உள்ள 550க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணா பல்கலையின் துணைவேந்தரான சூரப்பாவுக்கும், அரசுக்கும் இடையேயான மோதல்களால், இந்தாண்டு அண்ணா பல்கலையில் கலந்தாய்வு நடப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

புதிய விதிமுறைகளால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து, மாணவர்களின் சேர்க்கை விகிதமும் குறைந்துள்ளதாக தனியார் கல்லூரிகள் கவலை தெரிவித்துள்ளன. 

இது குறித்து, தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு நடத்திய ஆலோசனையில்  அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கி, அதனுடன் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. இதை அரசிடம் கோரிக்கையாக வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்