பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபரீதம்

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் பகுதியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
x
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் பகுதியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவர் யாரும் இல்லாதததால் செவிலியர் முத்துக்குமாரிக்கு பிரசவம் பார்க்க முயன்றுள்ளார். குழந்தை முழுமையாக வெளியே வரும் முன்பே, செவிலியர் அலட்சியமாக, குழந்தையின் தலையை மட்டும் பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதில் குழந்தையின் தலை துண்டானது. உடல் பாகங்கள் தாயின் வயிற்றுக்குள்ளே இருந்தது. மேல்சிகிச்சைக்காக பொம்மி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் பாகங்கள் எடுக்கப்பட்டது. இதற்கு காரணமான செவிலியர் முத்துகுமாரி மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்