தேர்தல் நாளன்று, பெரிய வியாழன் பண்டிகை.- கிறிஸ்தவ பள்ளி வாக்குச்சாவடிகளை மாற்றக்கோரி வழக்கு
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 18ஆம் தேதி பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த விசாரணையின் போது,கிறிஸ்தவ பள்ளிகளை பொறுத்தவரை, மனுதாரர் சங்கத்தின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, இது குறித்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நாளை மறுநாளைக்கு தள்ளி வைத்தனர்
Next Story