சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவஸ்தை
திருச்சி கல்வி மாவட்டத்தில் அரசு உதவிப் பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
திருச்சி கல்வி மாவட்டத்தில் அரசு உதவிப் பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த மாதம் சம்பளம் தொடர்பாக தயாரிக்கப்படும் நிதி ஒதுக்கீடு அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலகம் தயாரித்து உரிய நேரத்தில் அனுப்பாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாதம் முதல் தேதி சம்பளம் வாங்க வேண்டிய ஆசிரியர்கள், தற்போது, 18 தேதியாகியும் சம்பளம் வராததால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மாவட்ட கரூவூலத்திற்கும், மாவட்ட கல்வி அலுவலத்திற்கும் நடக்கும் உச்சகட்ட பனிப் போர் காரணமாகவே அந்த முறையில் சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story