அரசு நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு - கிராமத்தினர் போராட்டம்
அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைக்கரை கோட்டலம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது தனியார் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். தங்கள் கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்னர்.
Next Story