பழனியில் களைகட்டியது பங்குனி உத்திர திருவிழா
தீர்த்த காவடி, மயில் காவடிகளுடன் பக்தர்கள் வருகை
பழனியில் பங்குனி உத்திர திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. விழாவின் இரண்டாம் நாளான இன்று, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.காவேரி, காசி, திரிவேணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து வந்த பக்தர்கள் ஆடி பாடி, மயில் காவடியுடன் வலம் வந்ததோடு சுவாமிக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.பழனியில் பக்தர்கள் தீர்த்த காவடி, மயில் காவடிகள் எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர்.அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று அருள்மிகு திருஆவின்ன்குடி திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 21 ம் தேதி மாலை நடைபெறுகிறது.பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு ஊர்களில் உள்ள புண்ணிய நதிகளான காசி,கயா,திரிவேணி சங்கம் கொடுமுடி புனித தீர்த்தங்கள் கொண்டு வந்து அபிசேகம் செய்வர்.இன்று இரண்டாம் நாளான இன்று திருச்சி மாவட்டம் குளித்தளை ஊரை சேர்ந்த பக்தர்கள் மயில் காவடி எடுத்து வந்தனர்.கீரிவீதியை முழுவதும் சுற்றி ஆடிபாடி வந்து பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்தி கடனை செலுத்தினர்
Next Story