3 தொகுதிகளில் 100 வேட்பாளர்களை நிறுத்தும் போராட்டம் - நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு
இரண்டாவது கட்டமாக 50 வேட்பாளர்கள் அறிமுகம்
காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளில் 100 வேட்பாளர்களை நிறுத்தும் போராட்டத்தினை நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.அதில் இரண்டாவது கட்டமாக மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 50 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது.காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு,ஹைட்ரோ கார்பன் திட்டம்,விவசாய நிலங்களில் கெயில் குழாய் புதைக்கும் திட்டம், நான்கு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் போராட்டத்தினை நிலம், நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவிததது.கடந்த 11ம் தேதி முதல்கட்டமாக 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்த நிலையில்,அதனையடுத்து இரண்டாம் கட்டமாக செம்பனார்கோவிலில் 50 வேட்பாளர்களை அறிமுகப்படும் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story