தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை
4 நாட்களில் ரூ4.15 கோடி பறிமுதல் என அறிவிப்பு
தமிழகம் முமுவதும் கடந்த 11ந்தேதி முதல் 14 ந்தேதி வரை தேர்தலையொட்டி நடைபெற்ற வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்
யப்பட்டது. 4 நாட்களில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலைக்குழு மூலம் 4 கோடியே 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ந்தேதி மட்டும் ரொக்கமாக 74 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story