திருவிழாவா...? தேர்தலா...? : பெண்களின் அதிர்ச்சி கருத்து

மதுரை சித்திரை திருவிழாவும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே நாளில் வரவிருக்கும் நிலையில், தேர்தலை விட திருவிழாவிற்கு தான் முக்கியத்துவம் தருவோம் என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவிழாவா...? தேர்தலா...? : பெண்களின் அதிர்ச்சி கருத்து
x
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, வரும் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைதொடர்ந்து, ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை மீனாட்சி திக்விஜயம், திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி என பல முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதுஒருபுறம் இருக்க, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், திருவிழாவிற்கு செல்வீர்களா, வாக்களிக்க செல்வீர்களா என பெண்கள் சிலரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் திருவிழாவிற்கு தான் முக்கியத்துவம் தருவோம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்