தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

தமிழக வளங்களை பாதுகாக்க அதிகாரிகள் தவறியதால் பிற மாநிலங்களிடம் தண்ணீருக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
x
சென்னையில் நீர் மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தக்கோரி மேனன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீர் நிலைகளை பாதுகாக்கா விட்டால் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கே சிக்கல் ஏற்படும் என்றும்,​ கடலில் மட்டுமே தண்ணீரை காண முடியும் எனவும் வேதனை தெரிவித்தனர். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் போது நீர் நிலைகளை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என கூறிய நீதிபதிகள், நீர்நிலைகளை தூர் வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 18 ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்