தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஸ்டாலின் வருவார்
நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்
நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.டெல்லியில் இருந்து கொண்டே மாநில அரசுகளுக்கு மத்திய பாஜக அரசு அழுத்தங்களை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.மாநில அரசுகளை பிளாக் மெயில் செய்து தனது கட்டுப்பாட்டில் மத்திய அரசு வைத்திருப்பதாகவும் விமர்சித்தார். தமிழர்களை யாரும் அடக்கி ஆளமுடியாது என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி,தேர்தலில் தமிழ் மக்களின் உணர்வுகள் பேசும் என்றும் கூறினார்.மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக வருவார் என்றும் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story