பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - அரசு கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்