தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற ஆவணங்களை விளம்பரப்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்ற ஆவணங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற ஆவணங்களை விளம்பரப்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம்
x
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நடைமுறை வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக அமலுக்கு வருகிறது. அதன்படி, வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு மற்றும் தண்டனை விவரங்கள் குறித்த தகவல்களை முன்னணி நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களாவது விளம்பரம் செய்ய வேண்டும் எனவும், வழக்குகள் இல்லை என்றாலும் அது குறித்த தகவல்களையும் விளம்பரம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  வேட்பாளர்களின் குற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித்  தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும், அது குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதை செய்ய தவறும் கட்சிகள் மீது அங்கீகாரம் ரத்து, இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் பாயும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வேட்பாளர்கள் குற்ற ஆவணம்- தேர்தல் ஆணையம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்