9 ஆண்டுகளாக காதலித்து ஏமாற்றிய காதலன் : காவல்நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா
9 ஆண்டுகளாக தன்னை காதலித்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி லால்குடி மகளிர் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
9 ஆண்டுகளாக தன்னை காதலித்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி லால்குடி மகளிர் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த கண்மணி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள காருண்யா நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதல் என்ற பெயரில், தன்னிடம் பல முறை அத்துமீறிய வெங்கடேஷ், திருமண பேச்சு எழுந்தபோது, திடீரென மறுப்பு தெரிவித்ததாக கண்மணி குற்றம்சாட்டுகிறார்.
Next Story