மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது
மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி
x
கடந்த ஆண்டில் ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம்,சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் இந்த செயலி முதன்முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.தற்போது மக்களவைத் தேர்தலிலும் இந்த செயலி மூலம் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் 'C Vigil' செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம்.இதில் செல்போன் எண்ணை பதிவு செய்தும், செய்யாமலும் பயன்படுத்த முடியும்.வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகிப்பது,திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது, மிரட்டுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது, வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது,பொய்யான செய்திகளைப் பரப்புவது, பணம் கொடுத்து செய்திகளை பிரசுரிக்கச் செய்வது போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் இது தொடர்பாக புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து புகார்அளிக்கலாம்.புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்