துப்பாக்கி சண்டையில் காயமடைந்த மாவோயிஸ்ட் அடையாளம் தெரிந்தது

கேரள மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்து தப்பி சென்ற மாவோயிஸ்ட் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர்.
துப்பாக்கி சண்டையில் காயமடைந்த மாவோயிஸ்ட் அடையாளம் தெரிந்தது
x
வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு நள்ளிரவில் சென்ற மாவோயிஸ்ட்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த அமைப்பை சார்ந்த முக்கிய நபர் ஜலீல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான சி.சி.டி.வி. பதிவுகளை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர். ஜலீலின் சடலம் உடற்கூறு ஆய்விற்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜலீலுடன் வந்த நபர், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தப்பி சென்றார். அவர் பற்றி விடுதி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தபோது, தமிழில் பேசிக்கொண்டு வந்ததாக குறிப்பிட்டனர். கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், 2009ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் சிக்மங்களூரில் மாவோயிஸ்ட் ஆதரவு சுவரொட்டி ஒட்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட சந்துரு என்ற மாவோயிஸ்டே, ஜலீலுடன் வந்தவர் என்பதை கேரள போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, பொள்ளாச்சியை சேர்ந்த மாவோயிஸ்ட் சந்துருவை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்